வனவியல் தொழில்நுட்பங்கள் |
|||||
நாற்றங்கால் தொழில்நுட்பம் | |||||
பயனாளிகள் விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள், மாநில வன மேம்பாட்டு நிறுவனங்கள், வனம் சார்ந்த நிறுவனங்கள், அரசு-சாரா நிறுவனங்கள் போன்றவைகள் ஒருங்கிணைக்கப்படாத நாற்றங்கால்களை அமைக்கலாம். உள்ளூரில் நல்ல வரவேற்புள்ள / தேவைக்கேற்ப திட மரங்கள், விறகு, தீவனம், பழங்கள், மரம் அல்லாத வனப் பொருட்கள் மற்றும் அழகு அம்சம் கொண்ட இனங்களின் ஆரோக்கியமான நாற்றுகளை நாற்றங்கால் அமைத்துத் தரலாம். நாற்றங்கால் தொழில்நுட்பம் 0.25 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதியில் 1.25 லட்சம் நாற்றுகள் வளர்ப்பது லாபகரமாக கருதப்படுகின்றது. கடன் வாங்குபவரின் பிரிவு, கொள்திறன் மற்றும் நாற்றங்காலின் தேவைக்கேற்ப நாற்றங்கால் பரப்பளவு அதிகரிக்கப்படும். சரியான வடிகால் வசதிக்காக நாற்றங்கால்கள், சீரான சரிவு நிலங்களில் அமைக்க வேண்டும். களை எடுத்தல் மற்றும் உழுதல் மூலம் நிலம் தயார் செய்யப்படும். முதலில் நாற்றங்கால்கள் படுக்கைகளில் வளர்த்து பின்னர் தொட்டிகளில் வளர்க்கப்படும். நாற்றங்காலிற்கு நிரந்தர நீர் ஆதாரம் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்ப நிலை மற்றும் செலவை குறைக்க இது உதவும். 100m x 25m அளவு கொண்டு செவ்வக வடிவில் அமைக்க வேண்டும்.
|
|||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 |